மூட்டுவலிக்கு நிரந்தர தீர்வு - guru yogaram babuji - tiruvannamalai

 

முடவாட்டுகால் ஆட்டுக்கால் கிழங்கு


முடவாட்டுகால் ஆட்டுக்கால் கிழங்கு (Drynaria quercifolia) என்பது தமிழ்நாட்டு மலைப்பகுதிகளில் கிடைக்கும் ஒரு வகை பெரணித் தாவரத்தின் கிழங்கு ஆகும். 

 இக்கிழங்கை கொல்லிமலையில் முடவன் ஆட்டுக்கால், ஆட்டுக்கால் கிழங்கு என்றும் ஏற்காடு சேர்வராயன் மலைப் பகுதியினர் சைவ ஆட்டுக்கால் என்றும் அழைக்கின்றனர். இக்கிழங்குகள் பார்ப்பதற்குக் கம்பளி போர்த்தியதுபோல மெல்லிய இழைகளுடன் ஆட்டுக்கால் போன்றே காணப்படும்.

 இந்தக் கிழங்கைக் கொண்டு சூப் செய்யப்படுகிறது. இந்த சூப்பின் சுவை அப்படியே ஆட்டுக்கால் சூப்பின் சுவையை ஒத்த‍தாக இருக்கும். மேலும் இக்கிழங்கு மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகிறது. இதனால் மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், செரிமான உபாதைகள் போன்றவை குணமாகும் என்று கூறப்படுகிறது.

இவை இந்தியா, தென்கிழக்கு ஆசியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூ கினி, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் உள்ளன. தமிழகத்தை பொருத்தவரையில் கொல்லிமலை மற்றும் ஏற்காடு ஆகிய இரண்டு இடங்களில் இந்த கிழங்கு அதிக அளவில் கிடைக்கிறது. முடவாட்டுக்கால் கிழங்கு என்று சொன்னாலே அது கொல்லிமலை தான் என்கிற அளவிற்கு முடவாட்டுக்கால் விளையும் பிரதான இடமாக கொல்லிமலை இருக்கிறது.


 

மருத்துவ குணங்கள்

1) முடவாட்டுக்கால் கிழங்கு தளர்ந்த வயதிலும் கால் தடி ஊன்றி நடக்கும் வயதில் உள்ளவர்களுக்கும் எலும்புகளுக்கு பலத்தைக் கொடுத்து கால்களை உறுதியாக்குமாம்.


2) எலும்பு மூட்டுகளுக்கு இடையே உள்ள மஜ்ஜையை நன்கு உறுதியாக வளர்க்கவும் அதிகரிக்க செய்யவும் இந்த முடவாட்டுக்கால் கிழங்கு பயன்படுகிறது.


3) மூட்டு வலி போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகச் சிறந்த வழி நிவாரணையாக செயல்படும்..


4) ஆர்தரைட்டிஸ்(மூட்டு வலிகல்லால் ஏற்படும் வீக்கம் மற்றும் கடின தன்மையால் உருவாகும் நோய்)போன்றவைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வது முடவாட்டுக்கால் கிழங்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.


5) முக்கியமாக, சர்க்கரை, எண்ணெய்யில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஆல்கஹால் போன்றவற்றை தவிர்த்து பச்சை காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்து கொள்வதால், முடக்குவாதம் கட்டுக்குள் இருக்கும்.


6) அதேபோல, இதில் முடவாட்டுக்கால் கிழங்கினை சூப் வைத்து குடிக்கலாம். ஆட்டுக்கால் சைவம் அல்லது சைவ ஆட்டுக்கால் அல்லது முடவன் ஆட்டுக்கால், அல்லது ஆட்டுக்கால் கிழங்கு என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த கிழங்கில், கால்சியம், வைட்டமின், பாஸ்பரஸ், புரதம், தாது உப்புக்கள் பல சத்துக்கள் உள்ளன.


7) எலும்பு அடர்த்தி: முடக்கு வாதத்துக்கும், மூட்டு வலிகளுக்கும், அசதி, தசைபிடிப்புகளுக்கும் மிகக்சிறந்த மருந்தாகும். எலும்பு அடர்த்திக்குறைவு (ழுளவநழிநெயை) நோய்களுக்கும் இந்த கிழங்குகள் மருந்தாகின்றன.. ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ குணமும் இதற்கு உண்டு.. இந்த கிழங்குக்கு உண்டு. எலும்பு, நரம்பு, தசைகளில் ஏற்படும் கோளாறுகளையும் இந்த முடவாட்டுக்கால் போக்கிவிடுவதுடன், காய்ச்சல், செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.


8) கருப்பை சுருங்குதல், சிறுநீரகம் சுருங்குதல், உள்ளுறுப்பு சுருங்குதல், புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக முடவாட்டுக்கால் கிழங்கு உதவுகிறது.. பெரும்பாலும் இந்த கிழங்கை, தோல் சீவி கழுவி, மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் அரைத்து போட்டு, சூப் போல வைத்து குடிப்பார்கள்...


9) சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த சூப் மிகவும் நல்லது.. குழந்தைகளுக்கு ஏற்படும் வாத நோய்க்கும் இந்த சூப்பை குடிக்க தரலாம்.. மூட்டுவலியை தவிர, கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலிக்கும் இந்த சூப் நல்லது.


10) மலச்சிக்கலுக்கும் சிறந்த நிவாரணம் அளிக்கும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலிக்கும் சிறந்த தீர்வாக இருக்கிறது. 


11) தாய் பாலுக்கு நிகரான (லாரிக் அமிலம் உள்ளது) நோய் எதிருப்பு சக்தி உள்ளது. 



 

 


Comments

Popular posts from this blog

முடவாட்டுக்கால் கிழங்கு (Arrowroot) ஒரு இயற்கை அன்பளிப்பு

தினந்தோறும் பலரின் பசியை போக்கிடும் அன்னதான சேவை The alms service that satiates the hunger of many