முடவாட்டுகால் ஆட்டுக்கால் கிழங்கு முடவாட்டுகால் ஆட்டுக்கால் கிழங்கு ( Drynaria quercifolia ) என்பது தமிழ்நாட்டு மலைப்பகுதிகளில் கிடைக்கும் ஒரு வகை பெரணித் தாவரத்தின் கிழங்கு ஆகும். இக்கிழங்கை கொல்லிமலையில் முடவன் ஆட்டுக்கால், ஆட்டுக்கால் கிழங்கு என்றும் ஏற்காடு சேர்வராயன் மலைப் பகுதியினர் சைவ ஆட்டுக்கால் என்றும் அழைக்கின்றனர். இக்கிழங்குகள் பார்ப்பதற்குக் கம்பளி போர்த்தியதுபோல மெல்லிய இழைகளுடன் ஆட்டுக்கால் போன்றே காணப்படும். இந்தக் கிழங்கைக் கொண்டு சூப் செய்யப்படுகிறது. இந்த சூப்பின் சுவை அப்படியே ஆட்டுக்கால் சூப்பின் சுவையை ஒத்ததாக இருக்கும். மேலும் இக்கிழங்கு மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகிறது. இதனால் மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், செரிமான உபாதைகள் போன்றவை குணமாகும் என்று கூறப்படுகிறது. இவை இந்தியா, தென்கிழக்கு ஆசியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூ கினி, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் உள்ளன. தமிழகத்தை பொருத்தவரையில் கொல்லிமலை மற்றும் ஏற்காடு ஆகிய இரண்டு இடங்களில் இந்த கிழங்கு அதிக அளவில் கிடைக்கிறது. முடவாட்டுக்கால் கிழங்கு என்று சொன்னாலே அது கொல்ல...