வைகாசி பௌர்ணமியில் இதை மட்டும் செய்தால் போதும் கோடி புண்ணியம் Sri Annamalayar seva Trust (NGO) TVM





வைகாசி பௌர்ணமியில் இதை மட்டும் செய்தால் போதும் கோடி புண்ணியம்
Sri Annamalayar seva Trust (NGO) TVM






 

Call – 09677625465 – 09384158541 Every day food Donate service Tiruvannamalai.

Food Giving for Sadhukkal, Senior Citizens, Handicapped, Poor Peoples, Unsupported peoples, Physically Challengers, devotees.

Sri Annamalayar Seva Trust (NGO) Tiruvannamalai. Tamilnadu – India. Pincode 606601.

வைகாசி பௌர்ணமியில் சந்திர தரிசனம் சிறப்பு வாய்ந்தது. வைகாசி பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை வழிபட்டு கிரிவலம் சென்றால் கோடி புண்ணியம் கிடைக்கும். சிவபெருமானில் பஞ்ச பூத தலங்களில் பக்தர்களால் நெருப்புத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. “மலையே மகேசன்” சிவபெருமான் மலை வடிவமாக காட்சி அளிப்பதாக ஐதீகம். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்து வணங்குவார்கள். மேலும் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தட்ஷிண கைலாயம் என்றும் பக்தர்களால் அழைக்கப்படும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். மாதந்தோறும் பௌர்ணமி நன்னாளிலும் தமிழ் மாத பிறப்பான முதல் நாளிலும், ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் , சித்த புருஷர்களும் ஞானிகளும் யோகிகளும் , சூட்சும ரூபமாக இன்றைக்கும் அரூபமாக கிரிவலம் வந்து, ஈசனை வணங்கி வருகின்றனர் என்பதாக ஐதீகம். இங்குள்ள மலையானது சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக வரலாற்று ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர். கிரிவலம் வரும்போது அங்கிருக்கும் சாதுக்களுக்கு தானம் செய்வது சிறப்பாகும். கிரிவலம் வந்தால் பாவங்கள் முழுவதும் நீங்கிவிடும். மேலும் பாவம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தையும் நமக்குத் தோற்றுவித்துவிடும். வயதானவர்களுக்கும் உடல் நலிவுற்றவர்களுக்கும், வலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம். பிறந்த நாள், திருமண நாள், மூத்தோர்களின் நினைவு நாள் என்று எந்நாளும் சிவபெருமானை நினைத்து வலம் வரலாம். திங்கட்கிழமை கிரிவலம் வர இந்திர பதவி கிடைக்கும். செவ்வாய்க்கிழமை கிரிவலம் வர கடன், வறுமை நீங்கும். புதன் கிழமை கிரிவலம் வர கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும். வியாழக்கிழமை கிரிவலம் ஞானம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை கிரிவலம் வர வைகுண்டப் பதவி கிடைக்கும். சனிக்கிழமை கிரிவலம் வர பிறவிப்பிணி அகலும். ஞாயிறு கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும். கிரிவலப் பாதையான 14 கி.மீ தூரத்தை பக்தர்கள் நடந்துதான் கடக்க வேண்டும். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும் . நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடியோ, சிவபுராணத்தை பாராயணம் செய்தபடியோ கிரிவலம் வரவேண்டும். அப்பொழுதுதான் கிரிவலம் வருவதற்கான பலனும் புண்ணியமும் சேரும். எனவே புண்ணியம் மிகுந்த இந்த வைகாசி பவுர்ணமி தினத்தன்று பக்தர்களுக்கும் சாதுக்களுக்கும் தானம் வழங்குவது உங்களின் பாவ வினைகளை போக்கி புண்ணியத்தை உண்டாக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்கள், குறைபாடுகள் நீங்கும். பொருளாதார கஷ்ட நிலைகள் நீங்கி செல்வ சேர்க்கை உண்டாகும். எல்லா தானங்களிலும் விட சிறந்த தானம் அன்னதானம் என்பது நமது நமது முன்னோர்களின் கருத்தாக உள்ளது.

Moon darshan is special in Vaikasi Poornami. If you worship Tiruvannamalai Arunachaleswarar and go to Krivalam on Vaikasi Poornami day, you will get crores of blessings. Thiruvannamalai is worshiped as a fire place by devotees in Lord Shiva's Pancha Bhutha Thalams. It is believed that “Malaye Mahesan” represents Lord Shiva in the form of a mountain. Devotees who visit the Tiruvannamalai Arunasaleshwarar temple will circumambulate the hill here and worship. Also, on every full moon day, thousands of devotees visit Tiruvannamalai, also known as Tatshina Kailayam. It is believed that every month on the full moon day and on the first day of the birth of the Tamil month, on every Pradosha day, Siddha Purushas, Gnanis and Yogis come to Krivalam in a subtle form and still today in an invisible form and worship Isa. Historians say that the mountain here was formed about 250 million years ago. It is better to donate to the sadhus there when coming to Krivalam. If Krivalam comes, all the sins will be removed. It also gives us the idea not to commit sin. For old and debilitated persons, Brahmahati dosha is removed by the mere thought of crawling. Mountaineering is available 365 days a year. You can remember Lord Shiva on any day be it birthday, wedding day, memorial day of elders. Indra's post will be available to Krivalam on Monday. Debt and poverty will get rid of Krivalam on Tuesday. If you come to Krivalam on Wednesday, you will get mastery in arts and salvation. On Thursday, you will get enlightenment. Vaikundap post will be available for Krivalam on Friday. On Saturday, Kirivalam will be visited. If Krivalam comes on Sunday, you will get Shivaloka rank. Devotees have to walk the 14 km Kriwalap Path. Only rotate from left to right. Krivalam should come after chanting Namasivaya Mantra or reciting Shiva Purana. Only then will the fruit and virtue of coming to Krivalam accrue. So giving alms to devotees and sadhus on this auspicious day of Vaikasi Purnami will remove your sinful deeds and make you virtuous. Children will excel academically. Physical and mental diseases and defects will be removed. Economic difficulties will be removed and wealth will be added. It is the opinion of our forefathers that almsgiving is the best of all donations.


Comments

Popular posts from this blog

முடவாட்டுக்கால் கிழங்கு (Arrowroot) ஒரு இயற்கை அன்பளிப்பு

தினந்தோறும் பலரின் பசியை போக்கிடும் அன்னதான சேவை The alms service that satiates the hunger of many